16 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய இளைஞரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர்.
சென்னை, விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அவரது பெற்றோர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருந்ததாகவும், கடந்த சில தினங்களுக்கு முன்பு அதைக் கலைதுள்ளார் எனவும் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த தாயார் மாணவியிடம் விசாரணை மேற்கொண்டதில் கடந்த மாதம் உறவினர் வீட்டில் புதுமனை புகுவிழா நிகழ்ச்சிக்கு சென்றிருந்த போது அங்கு பழக்கமான 24 வயது இளைஞன் தன்னை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் தெரிவித்தார்.
அதுமட்டுமில்லாமல் இதை வெளியில் கூறினால் உன்னை கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியதாக தெரிவித்தார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அப்பெண் தாயார் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த இளைஞனைப் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.