சித் ஸ்ரீராமின் நடவடிக்கை சரியில்லாததால் இசையமைப்பாளர்கள் சங்கம் அவருக்கு பாட தடை விதித்துள்ளது.
2013ஆம் ஆண்டு வெளியில் வந்த கடல் திரைப்படத்திற்கு இசை அமைத்த ஏ.ஆர்.ரகுமான் “அடியே” என்ற பாடலின் மூலம் தமிழ் சினிமாவிற்கு மென்மையான குரல் கொண்ட சித்ஸ்ரீராமை அறிமுகப்படுத்தினார். ஆனால் அப்பாடல் அவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றுத் தரவில்லை. இந்நிலையில் ஏ.ஆர்.ரகுமான் “ஐ” திரைப்படத்தில் ‘என்னோடு நீ இருந்தால்’ என்ற பாடலை பாட மீண்டும் ஒரு வாய்ப்பை அளித்தார். இப்பாடல் எதிர்பார்த்ததைவிட கூடுதல் வெற்றியை பெற்றுத் தந்தது.
இதனைத் தொடர்ந்து அச்சம் என்பது மடமையடா,மெர்சல் உள்ளிட்ட அனைத்து படங்களிலும் ஏ.ஆர்.ரகுமான் சித்ஸ்ரீராமுக்கு வாய்ப்பினை தொடர்ந்து வழங்கி வந்த நிலையில், அனைத்து வாய்ப்புகளையும் மெகா ஹிட்டாக மாற்றினார். இவரது அபார திறமைக்கு ஏ.ஆர்.ரகுமான் மட்டுமல்லாமல் டி.இமான்,யுவன் சங்கர் ராஜா,டர்புகா சிவா உள்ளிட்ட அனைத்து இசையமைப்பாளர்களும் தொடர்ந்து வாய்ப்பு அளித்து வந்தனர்.
இந்நிலையில் இவர் என்.ஜி.கே படத்தில் இறுதியாக பாடிய அன்பே பேரன்பே என்ற பாடல் பிளாக்பஸ்டர் வெற்றியைத் தர சித்ஸ்ரீராம் பாடினாலே வெற்றிதான் என்று இசையமைப்பாளர்கள் மத்தியில் ஒரு எண்ணத்தைத் தோற்றுவித்து. இவ்வாறு வெற்றி நடை போட்டுக் கொண்டிருந்த சித் ஸ்ரீராமின் இசை வாழ்க்கை தற்பொழுது தடுமாற தொடங்கியுள்ளது.
இசை அமைப்பாளர் சங்கத்தினர் சித் ஸ்ரீராம் இனிமேல் பாடக் கூடாது என்று தடை விதித்துள்ளனர். இது குறித்து இசையமைப்பாளர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் சித்ஸ்ரீராம் அவர்களின் செயல்பாடுகள் சரியாக இல்லாத காரணத்தினாலும்,இசை அமைப்பாளர் சங்கத்தில் சேராத காரணத்தினாலும் அவர் சங்கத்தை அவமதித்ததன் காரணமாக இனி எந்த இசை அமைப்பாளர்களும் அவருக்கு தங்களது படத்தில் பாட வாய்ப்பளிக்கக் கூடாது என்று தடை விதித்துள்ளது.