Categories
கல்வி மாநில செய்திகள்

சித்தா, ஆயுர்வேத படிப்புகளுக்கு நீட் தேர்வு…… அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி….!!

சித்தா மற்றம் ஆயுர்வேத படிப்புகளுக்கு இந்த ஆண்டு முதல் நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் படைப்பு கலை சிகிச்சை மையம், காற்றழுத்த குழாய் வழி அதி நவீன ஆய்வக சேவையை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் துவங்கி வைத்தார். இது மருத்துவமனையில் பணிபுரியும் பணியாளர்களின் குழந்தைகளை பாதுகாப்பான முறையில் பராமரிப்பதற்கு ஏற்ப நவீன வசதிகளுடன் கூடிய சுமார் 30 லட்சம் ரூபாய் செலவில் இந்த குழந்தைகள் காப்பகம் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் இருக்கும் குழந்தைகளை பராமரிப்பதற்காகவும், ஜோக்கர்கள் மூலம் குழந்தைகளை மகிழ்விப்பதற்கான மையமும் அமைக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில் ,  சித்தா மற்றம் ஆயுர்வேத படிப்புகளுக்கு இந்த ஆண்டு முதல் நீட் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும்ஆனால்  மாணவர் சேர்க்கையை நீட் மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடத்துவதற்கு விலக்கு கேட்டு தமிழக அரசு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியிருப்பதாக தெரிவித்தார்.

Categories

Tech |