சித்தார்த்தும், திரிஷாவும் ஆய்த எழுத்து, அரண்மனை-2, தெலுங்கில் நூஒஸ்தனன்டே போன்ற 3 படங்களில் இணைந்து நடித்துள்ளனர். தற்போது இந்தியில் வெளியான ‘அந்தாதுன்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் மீண்டும் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தாதுன் படத்தில் ஆயுஷ்மேன் குரானா, ராதிகா ஆப்தே, தபு ஆகியோர் நடித்த இந்த படம் கடந்த ஆண்டு திரைக்கு வந்து வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது.
இந்நிலையில் இந்த படம் கடந்த 3-ந் தேதி சீனாவில் ‘பியானே பிளேயர்’ என்ற பெயரில் வெளியாகி 13 நாட்களில் ரூ.200 கோடி வரை வசூல் குவித்து சாதனை நிகழ்த்தியுள்ளது. தற்போது அந்தாதுன் படத்தை தமிழில் தயாரிக்கவுள்ளார்கள். ஆயுஷ்மேன் கதாபாத்திரத்தில் சித்தார்த், ராதிகா ஆப்தே கதாபாத்திரத்தில் திரிஷாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.