பிரபல நடிகர் சித்தார்த்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்த படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சித்தார்த். இவர் தற்போது இந்தியன்2, நவரசா, டாக்டர் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘மகா சமுத்ரம்’ என்ற திரைப்படம் வரும் ஆகஸ்ட் 19ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாக உள்ளது. இந்நிலையில் சித்தார்த் தனது 42வது பிறந்தநாளை நேற்று கொண்டாடியுள்ளார்.
இதையொட்டி மகா சமுத்ரம் படக்குழுவினர் இப்படத்தின் போஸ்டரை வெளியிட்டு சித்தார்த்திற்கு வாழ்த்துக்களை கூறி உள்ளனர். ஆனால் நேற்று திரைப் பிரபலங்களில் பிறந்த நாளை மறக்க வைக்கும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. அது என்னவென்றால் பிரபல காமெடி நடிகர் விவேக் இறந்த செய்தி திரை உலகையே சோகத்தில் ஆழ்த்தியது. நடிகர் சித்தார்த்தும் விவேக்கின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.