சித்தி 2 தொடரிலிருந்து தான் விலகுவதாக ராதிகா சரத்குமார் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
1999 ஆம் ஆண்டு சித்தி என்ற தொடர் சன் டிவியில் முதன் முதலில் ஒளிபரப்பானது. மக்களின் அமோக வரவேற்பை பெற்ற இந்த தொடர் பல்வேறு தரப்பினரால் கவரப்பட்டது. இதைத்தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு தொடக்கத்தில் சித்தி-2 தொடர் ஒளிபரப்பானது. இந்த தொடரிலும் ராதிகா சரத்குமார் சித்தியாக நடித்தார்.
இந்நிலையில் கொரோனா காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு பின் ஜூலை இறுதியில் மீண்டும் வெளிவரத் தொடங்கியது. தற்போது நடிகை ராதிகா சித்தி 2 தொடரில் இருந்து விலகுவதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் .மேலும் தன் கணவருடன் சேர்ந்து அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.