Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

அவங்க கண்டுக்கல நீங்க தான் நடவடிக்கை எடுக்கணும்…! கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மண்பாண்ட தொழிலாளர்கள்… பெரம்பலூரில் சிறிது நேரம் பரபரப்பு..!!

பெரம்பலூரில் மண்பாண்ட பெண் தொழிலாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்று வந்த மக்கள் தொடர்பு திட்ட முகாம், மாதந்தோறும் நடைபெற்று வந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் மற்றும் வாரம் தோறும் நடைபெற்று வந்த பொது மக்கள் குறை தீர்க்கும் நாள் ஆகிவை ரத்து செய்யப்பட்டுள்ளன. இதையடுத்து பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிப்பதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு போடும் பெட்டி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று திங்கட்கிழமை என்பதால் பொதுமக்கள் தங்கள் குறைகளை தெரிவிப்பதற்காக பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க குவிந்த வண்ணம் வந்தனர்.

அங்கு குரும்பலூர் பேரூராட்சியில் உள்ள பாளையம் கிராமத்தில் வசித்து வரும் மண்பாண்டம் செய்யும் பெண் தொழிலாளர்கள் திடீரென மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அவர்கள் இதுகுறித்து கூறுகையில், நாங்கள் மண்பாண்டம் தொழில் செய்து வருகிறோம். நாங்கள் மண்பாண்ட தொழில் செய்வதை முறைப்படி தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ளோம்.

ஆனால் எங்களுக்கு வருடம்தோறும் தமிழக அரசால் வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்பு, மழைக்கால நிவாரண தொகை, வேட்டி, சேலை தற்போது கொரோனா காலத்தில் வழங்கப்பட்ட நல வாரிய உதவி தொகை ஆகியவை எங்களுக்கு வந்து சேரவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இதுகுறித்து பலமுறை தகவல் தெரிவித்தோம். ஆனால் அவர்கள் அதனை கண்டுகொள்ளவில்லை. மேலும் மாவட்ட ஆட்சியர் தான் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர். இதையடுத்து அவர்கள் கொண்டு வந்த மனுக்களை பெட்டியில் போட்டு விட்டு திரும்பிச் சென்றனர்.

Categories

Tech |