காஷ்மீர் பிரச்னையை எழுப்பி பாகிஸ்தான் ஆதரவு அமைப்புகள் தீபாவளி நாளில், லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகின.இது குறித்து தகவலறிந்த ’ஸ்காட்லாந்து யார்டு’ காவல் துறையினர் இந்தப் போராட்டத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
போராட்டக்காரர்கள் பேரணியாக வரும் பாதைகளில் தடுப்புகள் போடப்பட்டுள்ளன என்றும் பத்திரிகையாளர்களுக்கும் இந்தப் பகுதியில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் லண்டன் காவல் துறை தெரிவித்துள்ளது.ஆகஸ்ட் 15, செப்டம்பர் 3 ஆகிய தேதிகளில் நடைபெற்ற போராட்டங்களின்போது கடும் வன்முறை வெடித்தது. இது குறித்து இங்கிலாந்து அரசுக்கு இந்தியா தனது கவலையை வெளிப்படுத்தியிருந்தது. இந்தியத் தூதரகத்தைப் பாதுகாக்க அனைத்துவித நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று அந்நாட்டு அரசு உறுதியளித்துள்ளது.