தங்களுக்கு கொடுக்கப்பட்ட உணவை தயாரித்த வீடியோ காட்சியை பார்த்து வாடிக்கையாளர் அருவருப்படைந்துள்ளார்
சீனாவில் தனது குழந்தைகளுக்கு ஆர்டர் செய்த சாப்பாடு சுவையாக இல்லை எனக்கூறி வாடிக்கையாளர் ஒருவர் அதனை திருப்பி அனுப்பி உள்ளார். அனுப்பப்பட்ட உணவிற்கு பதிலாக கொண்டுவரப்பட்ட உணவில் ஒரு சிகரெட் துண்டு கிடந்தது அதை வாடிக்கையாளர் வெய்ட்டரிடம் காட்டி கேட்டதற்கு தவறுதலாக விழுந்திருக்கலாம் எனக் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து வாடிக்கையாளர் மேலாளரை அணுகி சிசிடிவி காட்சிகளை பார்க்க வேண்டும் என கேட்டுள்ளார்.
சிசிடிவி காட்சிகளை கண்ட வாடிக்கையாளர் அருவறுப்படைந்துள்ளார். காரணம் அந்த உணவைத் தயாரிக்கும் பொழுது சமையல்காரர் உணவில் எச்சில் துப்பும் காட்சி பதிவாகியிருந்தது. இச்சம்பவத்தை தொடர்ந்து உணவகம் அமைந்திருந்த மால் அந்த உணவகத்தை மூடுவதற்கும் குறிப்பிட்ட சமையல்காரர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது. உள்ளூர் அதிகாரிகள் அந்த உணவகத்தின் உரிமத்தை ரத்து செய்து ரூபாய்.10,60,088 அபராதம் விதிக்க உள்ளனர்.