Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பொட்டலத்தில் இதுவா இருக்கு…? சிக்கி கொண்ட வாலிபர்…. கைது செய்த போலீஸ்….!!

டிரைவர் கண்ணில் மிளகாய் பொடியை தூவிவிட்டு லாரியை கடத்திச் சென்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கர்நாடக மாநிலம் மைசூரு வினோபா நகரில் அசோக்குமார் என்பவர் வசித்து வருகின்றார். இவர் லாரி டிரைவராக இருக்கின்றார். இவர் கடந்த மாதம் 29-ம் தேதி மைசூரிலிருந்து லாரியில் காப்பிக்கொட்டை ஏற்றிக்கொண்டு கோவை மாவட்டம் வால்பாறைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது புளிஞ்சூர்  சோதனைச்சாவடியில் அசோக்குமார் சென்றபோது, அங்கு வந்த ஒரு வாலிபர் லாரியை நிறுத்தினார். இதனையடுத்து அசோக்குமாரிடம் அந்த வாலிபர் தான் லாரி டிரைவர் என்றும் தனக்கு தற்போது வேலை இல்லை உங்களுடன் நானும் வருகிறேன் என்றும் கூறியுள்ளார். அதன்பின் வாலிபரை, அசோக்குமார் லாரியில் ஏற்றிக்கொண்டு வால்பாறை சென்று காப்பிக்கொட்டை பாரம் இறக்கி விட்டு அங்கிருந்து பொள்ளாச்சி சென்றுள்ளார்.

அங்கு 2 பேரும் லாரியில் தங்கியிருந்தபோது வாலிபர் தான் திருப்பூர் மாவட்டம் கானூர்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தன்னுடைய பெயர் அய்யாசாமி என்றும் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து 2 பேரும் பொள்ளாச்சி மடத்துக்குளத்தில் இருந்து லாரியில் பேப்பர் லோடு ஏற்றிக்கொண்டு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ராஜன் நகர் அருகில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது ஒரு பாலத்தின் அருகில் லாரி சென்று கொண்டிருக்கும்போது அய்யாசாமி தனது சட்டைப்பையில் இருந்து ஒரு பொட்டலத்தை எடுத்துள்ளார். அந்த பொட்டலத்தில் இருந்த மிளகாய் பொடியை அய்யாசாமி திடீரென அசோக்குமார் மீது தூவி விட்டார்.

இதனால் அசோக்குமாருக்கு கண் எரிச்சல் ஏற்பட்டு லாரியை நிறுத்திவிட்டு கீழே இறங்கி அருகில் உள்ள பண்ணாரி சோதனைச்சாவடிக்கு சென்று காவல்துறையினர் அழைத்து வந்தார். ஆனால் அதற்குள் அய்யாசாமி லாரியை கடத்திச் சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்தது. அதன்பின் பண்ணாரி சோதனை சாவடியில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் அவ்வழியாக வந்த ஒரு லாரியை காவல்துறையினரின் தடுத்து நிறுத்தினர். அந்த லாரி அசோக்குமார் உடையது என்றும், கடத்தி சென்றது அய்யாசாமி என்றும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து அய்யாசாமியை கைது செய்ததோடு அவரிடம் இருந்த லாரியை மீட்டனர்.

Categories

Tech |