சத்தீஷ்காரில் கோர்பா மாவட்டத்தில் கெர்வானி கிராமத்தில் ஷியாம் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது தாயார் சுக்மதி. சமீபத்தில் ஷியாமின் தாயாருக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து உடனடியாக அவசர எண் 108 மற்றும் 112 தொடர்பு கொண்டு அழைத்துள்ளார். ஆனால் நாங்கள் வருவதற்கு காலதாமதம் ஏற்படும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். உடல்நலம் மிக மோசமடைந்து நிலையில் உடனடியாக ஆட்டோ ஒன்றில் தயாரை ஏற்றிக்கொண்டு கோர்பா மாவட்டத்தில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
அங்கு டாக்டர் ஒருவர் சிகிச்சை அளித்த போது திடீரென அந்த பெண்ணை அவர் அடித்து உள்ளார். தனது தாயாரை டாக்டர் அடிப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஷியாம் அவரை தடுத்துள்ளான். அதற்கு, நீ அமைதியா இரு என பதிலுக்கு டாக்டர் கூறியுள்ளார். ஷியாமின் தாயாரை டாக்டர் அடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த சம்பவத்தின் போது டாக்டர் குடிப்பதில் இருந்துள்ளார் என்று குற்றம் சாட்டப்படுகிறது. இது குறித்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் அவினாஷ் மேஷ்ராம் கூறியது, அந்த டாக்டருக்கு எதிராக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதன் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவினாஷ் தெரிவித்துள்ளார்.