Categories
உலக செய்திகள்

செயலிழந்த செயலி…. பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள்…. சரி செய்யும் சிக்னல் குழு….!!

சிக்னல் என்னும் மெஸேஜிங் செயலி செயலிழந்துள்ளதால் அதனை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த ஆண்டின் துவக்கத்தில் வாட்ஸ்அப் நிறுவனம் புதிய பாதுகாப்பு கொள்கையை அறிமுகப்படுத்தியது. இதற்காக ‘சிக்னல்’ என்னும் மெஸேஜிங் செயலியை உருவாக்கியது. ஆனால் புதிய பாதுகாப்பு கொள்கையானது தோல்வியில் முடிந்தாலும் அந்த செயலியானது அனைவரிடமும் பிரபலமானது. மேலும் இது பாதுகாப்பான தகவல் பரிமாற்றத்தை கொண்டுள்ளது என்பதால் விரைவாக புதிய வாடிக்கையாளர்களைப் பெற்றது. இந்த நிலையில் நேற்று முதல் சிக்னல் செயலி திடீரென செயலிழந்துள்ளது.

மேலும் அமெரிக்காவில் இன்று காலை மட்டும் சுமார்  1,200-க்கும் மேலான செயலிழப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த மொத்த செயலிப்புகளில் 43% பேர் உபயோகப்படுத்துவதில் இன்னல்களையும் 36% பேர் செய்திகளை பரிமாறுவதில் சிக்கல்களையும் 20% பேர் சர்வர் பிரச்சினைகளையும் சந்தித்துள்ளனர். இது தொடர்பாக சிக்னல் நிறுவனம் ட்விட்டர் பக்கத்தில் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் “சேவைகள் செயலிழந்து போனதால் ‘சிக்னல்’ தற்பொழுது பாதித்துள்ளது. இதனை சரிசெய்வதற்காக எங்களின் குழு முயற்சி செய்து வருகிறது” என்று தெரிவித்துள்ளனர். குறிப்பாக பாதுகாப்பான தனியுரிமைக் கொள்கையின் அடிப்படையில் சிக்னல் செயலியானது கடந்த 2014 ஆம் ஆண்டு சிக்னல் பவுண்டேஷன் என்ற நிறுவனம் உருவாக்கியது.மேலும் இது லாப நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதல்ல. அதிலும் இந்த ஆண்டு கடந்த ஜூலை மாதத்திலும் ‘சிக்னல்’ செயலி செயலிழப்பு ஆனது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |