சீனாவில் வேகமாக வந்த லாரி இருசக்கர வாகனம் ஓட்டி சென்றவர் மீது மோதிய விபத்தில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
சீனாவில் ஷெஜியாங் மாகாணத்தில் ஷெங் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்தார். அப்போது சிக்னலில் ஒளிர்ந்து கொண்டிருந்த சிவப்பு விளக்கையும் மீறி ஷெங் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் பக்கவாட்டு திசையில் வேகமாக வந்த லாரி ஒன்று ஷெங் மீது மோதியது.
இதனால் ஷெங் லாரியின் சக்கரங்களில் உரசியபடி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதனையடுத்து ஷெங் மீது மோதிய வேகத்தில் கட்டுப்பாட்டை இழந்த லாரி கவிழ்ந்தது. மேலும் லாரியில் இருந்த உருளைகள் விழுந்ததில் கார் ஒன்றும் சேதமடைந்தது.