Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“சில வருஷமா இப்படி தான் இருக்கான்” சித்திக்கு நடந்த கொடுமை… விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!

மனநலம் பாதிக்கப்பட்டவர் தனது  சித்தியை வெட்டி கொலை செய்து  விட்டு தானும்  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆங்கியனூர் பகுதியில் பழனிசாமி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு அங்கன்வாடி மையத்தில் பணிபுரியும் அமராவதி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பழனிசாமி இறந்து விட்டார். அதே பகுதியில் பழனிசாமியின் அண்ணன் மகனான அசோகன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அமராவதி மதியவேளையில் தனது வீட்டின் முன்பு அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது சித்தியான அமராவதியின்  வீட்டிற்கு அசோகன் சென்று அவருடன் தகராறு செய்துள்ளார்.

இந்த தகராறில் கோபமடைந்த அசோகன் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சித்தியான அமராவதியை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து சென்று  விட்டார். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த அமராவதி துடி துடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனையடுத்து காவல்துறையினர் அமராவதியை கொலை செய்த  அசோகனை கைது செய்ய திட்டமிட்டு அவரது வீட்டிற்கு விரைந்து சென்றுள்ளனர். ஆனால் அசோகன் வயலுக்கு அடிப்பதற்கு வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த  காவல்துறையினர் உடனடியாக அவரது உடலைக் மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கடந்த சில ஆண்டுகளாகவே அசோகன் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், அடிக்கடி மனைவியை அடிப்பது, காரணமில்லாமல் கோபப்படுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதனால் தான் தனது சித்தியான அமராவதியை வெட்டிக் கொலை செய்துவிட்டு தான் காவல்துறையினரிடம் மாட்டிக்கொள்வோம் என்ற அச்சத்தில் அசோகன் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார் என்பது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |