முதல்வர் பழனிசாமி தலைமையிலான தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெறுகிறது.
தமிழக எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அமைச்சரவையின் 2-வது கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் நடைபெறுகிறது. கடந்த மாதம் (ஜனவரி) 20-ந் தேதி இந்த ஆண்டின் முதல் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் கே.சண்முகம் மற்றும் துறை சார்ந்த செயலாளர்கள் கலந்து கொள்கின்றனர்.
இந்த கூட்டத்தில், 2020-2021-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது. மேலும், கொரோனா வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. இதேபோல், முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பது, தொழிற்சாலைகள் விரிவாக்கத்துக்கு அனுமதி அளிப்பது உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட இருக்கிறது. மேலும், தமிழகத்தில் நடத்தப்பட வேண்டிய நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்தும் விரிவாக விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
அதே நேரத்தில் பட்ஜெட் , கொரானோ வைரஸ் தடுப்பு உள்ளிட்ட முக்கிய விஷயங்களை விவாதிக்க இருக்கும் இந்த அமைச்சரவை கூட்டம் அதிர்ச்சியில் தான் நடைபெற இருக்கின்றது. அமைச்சர்கள் முழு மனதோடு விவாதிக்க போவதில்லை ஏனென்றால் தமிழக தலைநகர் சென்னையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுகின்ற அதே நேரத்தில் நாட்டின் தலைநகர் டெல்லியில் அமைச்சரை காலி செய்வதற்கான விவாதம் நடைபெற இருக்கின்றது.
தமிழக அமைச்சரவை மட்டுமல்ல , தமிழக ஆட்சியே கலையும் அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்த விவாதம் டெல்லி உச்சநீதிமன்றத்தில் நடைபெற இருக்கின்றது. எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 MLA_க்களை தகுதி நீக்கம் செய்ய கோரிய வழக்கின் விசாரணை நீண்ட நாட்களுக்கு பிறகு விசரணைக்கு வர இருக்கின்றது.
இதே போல் உச்சநீதிமன்றத்தில் வந்த மணிப்பூர் வழக்கில் சபாநாயகர் 4 வாரத்திற்குள் முடிவெடுக்க வேண்டும் என்ற உத்தரவு வரும் பட்சத்தில் அது அதிமுக அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தும்.எனவே இங்கே அமைச்சரவை கூட்டம் என்ன செய்வதென்று தெரியாத பீதியில் நடைபெறும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.என்னவானாலும் பொறுத்திருந்து நாளை தான் நாம் பார்க்க முடியும்.