Categories
உலக செய்திகள்

தண்ணீர் பற்றாக்குறை போக்க…. இந்தியாவின் ‘நைலஸ் தொழிநுட்பம்’…. பிரபல நாட்டு ஆய்வாளர்கள் தகவல்….!!

சிலி நாட்டில் தண்ணீர் பற்றாக்குறையை போக்க இந்தியாவின் நைலஸ் தொழில்நுட்பத்தை கையாண்டு வருகின்றனர்.

தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள சிலி, வடக்கே அட்டகாமா பாலைநிலமும், தென்முனையில் பனிக்கண்டமாகிய அண்டார்டிகாவை தொட்டு கொண்டுள்ள நாடாகும். இங்கு பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் தண்ணீர் பற்றாக்குறையை போக்க இந்திய தொழில்நுட்பத்தை சிலி நாட்டு ஆய்வாளர்கள் கையாண்டு வருகின்றனர்.

அதன்படி, பனிமலை முகடுகளில் செயற்கையான பனிப்பாறைகளை உருவாக்கி அதில் இருந்து தண்ணீரை சேமித்து வருகின்றனர். இதனை ‘நைலஸ்  தொழில்நுட்பம்’ மூலம் மழை காலங்களில் கிடைக்கும் தண்னீரை செயற்கை பனிப்பாறைகளாக மாற்றுகின்றனர். பின்னர், அதிலிருந்து தேவையான நேரத்தில் தண்ணீரை பெறுகின்றனர்.

அதுமட்டுமின்றி, இந்த தொழில்நுட்பத்தில் பனிப்பாறை உருகுவதால் போதிய மழைப்பொழிவு கிடைப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர். மேலும், நைலஸ் தொழில்நுட்பம் மூலம் சிலி நாட்டு தலைநகரில் உள்ள Cajon del Maipo மலையில் 100 மில்லியன் லிட்டர் தண்ணீரை சேமிக்க முயற்சித்து வருதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |