மருந்து வாங்கச் சென்ற முதியவரிடம் போலி 2 ஆயிரத்தை கொடுத்து மர்ம நபர் ஏமாற்றி சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள நஞ்சகவுண்டன்பாளையம் பகுதியில் முதியவர் சித்தன் வசித்து வருகிறார். இவர் கூலித் தொழிலாளியாக இருக்கின்றார். இவர் தன்னுடைய மகள் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் முதியவர் சித்தன் தன் வீட்டு அருகில் உள்ள மருந்தகம் கடைக்கு சென்றபோது அங்கு நின்று கொண்டிருந்த ஒருவர் அவரிடம் 2 ஆயிரம் ரூபாய் கொடுத்து சில்லரை கேட்டுள்ளார்.
இதன் காரணமாக முதியவர் தன்னிடத்தில் உள்ள சில்லரையை அவரிடம் கொடுத்து 2 ஆயிரம் ரூபாயை பெற்றுகொண்டார். இதனையடுத்து சித்தன் 2 ஆயிரம் ரூபாயை கொடுத்து கடையில் மருந்து கேட்டுள்ளார். அப்போது அந்த கடைக்காரர் இந்த ரூபாய் போலியானது என முதியவர் சித்தனிடம் திருப்பிக் கொடுத்துவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த சித்தன் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து வருத்தத்தில் வீட்டிற்கு சென்றுவிட்டார்.