தென்காசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்று ஒரு புறமும் மறுபுறம் கத்திரி வெயிலின் தாக்கமும் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் பொதுமக்கள் யாரும் வெளியே செல்ல முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து ஒரு சில இடங்களில் அவ்வப்போது மழை பெய்தாலும் அது சிறிது நேரத்திற்கு மட்டுமே குளிர்ச்சியை தருகிறது. அதன்பிறகு வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது.
இந்நிலையில் தென்காசி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழையானது ஒரு மணி நேரத்திற்கு மேலாக பெய்துள்ளது. அதன்பிறகு மழை நின்ற சிறிது நேரத்திலேயே வெயிலின் தாக்கம் ஆரம்பமானது. இதனையடுத்து மீண்டும் மழையானது பொழிய தொடங்கியதால் அப்பகுதியில் உள்ள சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் அப்பகுதியில் வெப்பம் குறைந்து ஜில்லென காற்று வீசி குளிர்ச்சியான சூழல் உருவானதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.