அரியலூர் மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தமிழகத்தில் ஒரு புறம் கொரோனா பாதிப்பும், மறுபுறம் வெயிலின் தாக்கமும் மாறி மாறி பொதுமக்களை மிகவும் வாட்டி வதைக்கின்றது. இதனால் பொதுமக்கள் யாரும் வீட்டிற்குள் இருக்க முடியாமலும், வெளியேயும் செல்ல முடியாமலும் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆண்டிமடம் மற்றும் ஜெயங்கொண்டம் பகுதியில் இரவு நேரத்தில் திடீரென இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்துள்ளது. இதனால் சாலைகளின் ஓரங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனையடுத்து காலை நேரத்தில் ஜில்லென்று காற்று வீசி வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் உருவானதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.