Categories
மாநில செய்திகள்

“தேவருக்கு வெள்ளி கவசம்”…. பசும்பொன்னில் கெத்து காட்டிய ஓபிஎஸ்…. அதிர்ச்சியில் இபிஎஸ்…. இதுதான் பெரிய டுவிஸ்ட….!!!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பசும்பொன் நகரில் முத்துராமலிங்க தேவருக்கு இன்று 115-வது ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை கொண்டாடப்படுகிறது. முத்துராமலிங்க தேவர் அரசியலிலும், ஆன்மீகத்திலும் ஈடுபட்டதோடு தேசிய அளவிலும் பிரபலமாகி கொடி கட்டி பறந்தார். முத்துராமலிங்க தேவருக்கு மறவர் சமுதாயத்தினரால் வருடம் தோறும் ஜெயந்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும் நிலையில், தென் தமிழகத்தில் அவர்களின் வாக்குகள் அதிக அளவில் இருப்பதாக கூறப்படுவதால் அரசியல் கட்சிகளும் முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்துவதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு மணிமண்டபம் கட்டிக் கொடுத்த நிலையில், முதல்வர் ஜெயலலிதா 14 கிலோ மதிப்புள்ள தங்க கவசத்தை தேவர் சிலைக்கு கொடுத்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் வழங்கப்பட்ட தங்க கவசத்தை அதிமுக கட்சியின் பொருளாளர் என்ற முறையில் கடந்த 2014-ம் ஆண்டில் இருந்து ஓபிஎஸ் தேவர் சிலைக்கு வங்கியிலிருந்து எடுத்து அணிவித்து வந்தார். ஆனால் தற்போது அதிமுகவில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்ததால் நீதிமன்றம் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் என இரு தரப்பினரையும் தங்க கவசத்தை வழங்குவதற்கு மறுத்ததோடு, வருவாய்த்துறை அதிகாரியிடம் கவசத்தை அணிவிக்கும் பொறுப்பையும் ஒப்படைத்தது.

இந்நிலையில் வருடம் தோறும் தங்கக் கவசத்துடன் செல்லும் ஓபிஎஸ் வெறும் கையுடன் நடப்பாண்டில் செல்வதற்கு விரும்பவில்லை. இதனால் 10 கிலோ 400 கிராம் எடை கொண்ட வெள்ளி கவசத்தை தேவர் சிலைக்கு அன்பளிப்பாக ஓபிஎஸ் கொடுத்துள்ளார். இந்த வெள்ளி கவசமானது ஒவ்வொரு மாதமும் வருகின்ற பௌர்ணமி மற்றும் இதர நல்ல நாட்களில் தேவர் சிலைக்கு அனுபவிக்கப்படும். மேலும் இபிஎஸ் பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்துவதற்கு கலந்து கொள்ளாத நிலையில் ஓபிஎஸ் அதிரடியாக களத்தில் இறங்கியதோடு இபிஎஸ் தரப்பினருக்கு அதிர்ச்சி தரும் விதமாக 10 கிலோ வெள்ளி கவசத்தையும் தேவர் சிலைக்கு வழங்கி மறவர் சமுதாயத்தின் மத்தியில் இன்று கெத்து காட்டியுள்ளார்.

Categories

Tech |