மூன்றாவது முறையாக நடிகர் சிம்பு கௌதம் மேனனுடன் இணைந்து “நதிகளிலே நீராடும் சூரியன்” என்ற படத்தில் பணியாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆயுத பூஜையை முன்னிட்டு சிம்பு நடித்துள்ள “மாநாடு” படம் வெளியாக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நடிகர் சிம்பு கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகும் “நதிகளிலே நீராடும் சூரியன்” என்ற படத்தில் கவனம் செலுத்த உள்ளார்.
மூன்றாவது முறையாக நடிகர் சிம்பு கௌதம் மேனனுடன் இணைந்து “நதிகளிலே நீராடும் சூரியன்” என்ற படத்தில் பணியாற்ற உள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக பிரபல பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன் நடிப்பார் எனவும் அவருடன் தற்போது பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.