புதுமுக இயக்குனர் நார்தன் இயக்கத்தில் சிம்பு, கவுதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் புதிய படம் உருவாகயிருக்கிறது.
ஸ்டூடியோ கிரீன் பட நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா தயாரிபில், சிம்புவும், கவுதம் கார்த்திக்கும் இணைந்து நடிக்கிறார்கள். சிம்புவுக்கு இது 45-வது படமாகும். இந்த படத்தை கே.ஜி.எப். படம் மூலம் பிரபலமான இயக்குனர் பிரசாந்த் நீலிடம் துணை இயக்குனராக பணியாற்றிய நார்தன் இயக்குகிறார். நவீன்குமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.
இப்படம் குறித்து இயக்குனர் நார்தன் கூறுகையில், ஆக்ஷன் கலந்த திகில் படமாக தயாரிக்கும் இந்த படத்தில் சிம்புவை இதுவரை பார்த்திடாத வித்தியாசமான வேடத்தில் பார்க்கலாம். கவுதம் கார்த்திக்கும் வலுவான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் படத்துக்கு கதாநாயகி மற்றும் உடன் நடிக்க இருக்கும் நடிகர், நடிகைகளையும், தொழில்நுட்ப கலைஞர்களையும் தேர்வுசெய்ய இருக்கின்றோம். ஜூன் மாதம் படப்பிடிப்பை தொடங்க உள்ளதாக நார்தன் கூறியுள்ளார்.