தளபதி விஜய் நடிப்பில் தெலுங்கு, தமிழ் ஆகிய இரு மொழி படமாக உருவாகி இருக்கும் “வாரிசு” வருகிற பொங்கல் பண்டிகைக்கு ரிலீசாக இருக்கிறது. தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கி இருக்கும் இப்படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜூ தயாரித்துள்ளார். தமன் இசை அமைக்கும் இப்படத்தின் தீ என்ற பாடலை நடிகர் சிலம்பரசன் பாடி உள்ளார்.
அண்மையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இவ்விழாவில் நடிகர் விஜய்” சிம்பு இந்த படத்தில் பாடியுள்ள பாடல் பற்றி குறிப்பிட்டு பேசினார். அதாவது, தீ பாடலை பாடுவதற்காக ஒரு ரூபாய் கூட சம்பளமாக அவர் பெற்றுக்கொள்ளவில்லை என சிம்புவின் பெருந்தன்மையை பாராட்டினார்.