‘சிம்பு அது போல் பேசியது தவறு’ என நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் கூறியுள்ளார்.
நடிகர் விஜய் நடிப்பில் மாஸ்டர் மற்றும் நடிகர் சிம்பு நடிப்பில் ஈஸ்வரன் ஆகிய இரண்டு படங்களும் வருகிற ஜனவரி 13 மற்றும் 14 தேதிகளில் அடுத்தடுத்து வெளியாக உள்ளது . திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்தது . ஆனால் நேற்று மத்திய அரசு இதற்கு கண்டனம் அறிவித்து 50 சதவீத இருக்கைகளுக்கு அனுமதிக்க உத்தரவிட்டது . சில தினங்களுக்கு முன் நடிகர் சிம்பு திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளிக்குமாறு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார் .
தற்போது இதுகுறித்து பேட்டியளித்துள்ள நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் , ‘சிம்பு அதுபோல் பேசியது தவறு . மேலும் கொரோனாவை வெல்வோம் கொல்வோம் என தொற்று வியாதியிடம் என்ன வசனங்கள் தேவை இருக்கிறது ? . சிம்புவுக்கு கொரோனா வந்தா தெரியும். நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்துள்ளேன்’ என்று கூறியுள்ளார் .