சிம்பு கல்லூரி விழாவில் கூறிய கருத்தினால் தனுஷ் மற்றும் சிம்பு இடையே கூட்டணி ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது
திரைப்பட உலகில் எதிரும் புதிருமாக இருந்தவர்கள் சிம்பு மற்றும் தனுஷ். பின்னர் காலப்போக்கில் அவர்களது கோபம் அனைத்தும் குறைந்து நட்பு வட்டத்தில் இணைந்தனர். தற்போது சிம்பு நடித்து வரும் மாநாடு திரைப்படத்தின் போஸ்டர் வெளியான இரண்டே நாட்களில் தனுஷ் நடிக்கும் ஜகமே தந்திரம் திரைப்படத்தின் போஸ்டரும் வெளியாகி உள்ளது. இதனால் மாநாடு திரைப்படத்திற்கு இருந்த வரவேற்பு குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனை தொடர்ந்து கல்லூரி விழா ஒன்றில் கலந்து கொண்ட சிம்பு ஒரு கருத்தை கூறியுள்ளார்.அது “வாழ்நாள் முழுதும் ஜெயித்துக் கொண்டே இருக்கும் ஒருவன் இறுதியில் ஒருநாள் தோல்வி அடைவான். அவன் ஹீரோ இல்லை அவன் தான் ஸிரோ. நான் ஹீரோ நான் வாழ்நாள் முழுதும் தோற்று உள்ளேன் எனவே கடைசியில் நான்தான் ஜெயிப்பேன்” என கூறியுள்ளார்
இது யாரை குறி வைத்து கூறினார் என்று தெரியாத நிலையில் தனுஷை குறிவைத்து தான் சிம்பு இதை கூறியிருக்கிறார் என இருவரின் ரசிகர்களும் கூறுகின்றனர். இதனைத்தொடர்ந்து இருவரது ரசிகர்களும் நேற்று ட்விட்டர் பக்கத்தில் பெரிய அளவில் சண்டை போட்டுள்ளார்கள். எங்கள் ஹீரோ தான் பெரியவர் நாங்கள் தான் ஹீரோ நீங்கள் ஸிரோ எனக்கூறி சண்டையை வளர்த்து வருகிறார்கள் இருவரது ரசிகர்களும்.