Categories
சினிமா தமிழ் சினிமா

”மாநாடு” பட வெற்றி விழாவிற்கு வராத சிம்பு…… வெங்கட் பிரபு போட்ட பதிவை பாருங்க……!!!

மாநாடு வெற்றி நிகழ்ச்சிக்கு சிம்பு வராதது பற்றி வெங்கட் பிரபு ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் நடிகர் சிம்பு முன்னணி நடிகராக வலம் வருபவர். வெங்கட்பிரபு இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ”மாநாடு”. இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். சுரேஷ் காமாட்சி தயாரித்த இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், நவம்பர் 25ம் தேதி வெளியான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து, இந்த படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் இன்று நடைபெற்றது. ஆனால், இந்த நிகழ்ச்சியில் சிம்பு பங்கேற்கவில்லை.

இதனால், இயக்குனர் சந்திரசேகர் சிம்புவை விமர்சனம் செய்து பேசினார். இந்நிலையில், வெங்கட்பிரபு இந்த நிகழ்ச்சிக்கு சிம்பு வராதது பற்றி ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் ”மிஸ் யூ சிம்பு. லவ் யூ சோ மச் அப்துல் காதர்” என குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |