சிம்பு அகில இந்திய ரசிகர் மன்றத்தின் தலைவரை மாற்றக் கோரி அவரது ரசிகர்கள் சிம்புவின் வீட்டு முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ் சினிமாவில் நடிகர் சிலம்பரசன் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இவரது நடிப்பில் தற்போது உருவாகி வரும் ஈஸ்வரன் திரைப்படம் அவரது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை தொடர்ந்து சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை வரும் பொங்கல் தினத்தன்று வெளியிட திரைப்பட குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் ரசிகர்கள் சிலம்பரசன் வீட்டின் முன்பு நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த போராட்டத்தின் போது, ரசிகர் மன்றத்தில் நிலவிவரும் குழப்பம் காரணமாக ரசிகர்கள் நிரந்தர முடிவை எடுக்க முடியாத சூழ்நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் அகில இந்திய சிம்பு ரசிகர் மன்றத்தின் தலைவரை மாற்ற வேண்டும் எனவும் சிம்புவின் ரசிகர்கள் அவரது வீட்டின் முன்பு நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.