Categories
சினிமா தமிழ் சினிமா

சிம்பு-கௌதம் மேனன் பட டைட்டில் அறிவிப்பு… ரசிகர்கள் உற்சாகம்…!!!

சிம்பு-கௌதம் மேனன் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது .

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது . இந்த படம் சிம்பு, திரிஷா இருவருக்கும் ஒரு திருப்புமுனையாக அமைந்தது . இதைதொடர்ந்து சிம்பு – கௌதம் மேனன் கூட்டணியில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான ‘அச்சம் என்பது மடமையடா’ படமும் சூப்பர் ஹிட் அடித்தது . இதையடுத்து  மூன்றாவது முறை சிம்பு – கவுதம் மேனன் கூட்டணி இணைய இருப்பதாக அறிவிப்பு வெளியானது .

இந்நிலையில் இவர்கள் இணையும் அந்த புதிய படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது . ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது ‌. மேலும் வேல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் இந்த படத்தை தயாரிக்க உள்ளார். மூன்றாவது முறையாக சிம்பு-கௌதம் மேனன்- ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி இணைந்துள்ளதால் இந்தப் படத்தின் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Categories

Tech |