விராட் கோலி வாழ்க்கை வரலாற்று படத்தில் சிம்பு நடித்தால் எப்படி இருக்கும் என்று சிம்பு ரசிகர்கள் போஸ்டர் ஒன்றை உருவாக்கி வெளியிட்டுள்ளனர்.
தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் சிம்பு. இவர் தற்போது மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து எடுக்கப்படும் திரைப்படத்தில் சிம்பு நடித்தால் எப்படி இருக்கும் என்று சிம்பு ரசிகர்கள் ஒரு போஸ்டரை உருவாக்கி வெளியிட்டுள்ளனர்.
மேலும் அந்த போஸ்டரைப் பார்த்த பலன் விராட் கோலியும்,சிம்புவும் ஒரே மாதிரிதான் இருக்கின்றனர் என்று தெரிவித்துள்ளனர். ஜாடையில் மட்டுமல்லாமல் அவர்கள் இருவரும் குணத்திலும், திறமையிலும் கூட ஒரே மாதிரி இருக்கின்றார்கள் என்று கூறி வருகின்றனர்.சிம்பு ரசிகர்கள் தயாரித்த இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாக பரவியது.