பெண் சாமியார் ஒருவர், நடிகர் சிம்புவிற்கு திருமண தோஷம் இருப்பதாகவும், தன்னிடம் வந்து பரிகாரம் செய்தால் திருமணம் நடக்கும் என்றும் கூறியிருக்கிறார்.
நடிகர் சிம்பு சிறுவயதிலேயே தமிழ்த்திரையுலகில் அறிமுகமாகி விட்டார். அப்போதே ரசிகர்களால், “லிட்டில் சூப்பர் ஸ்டார் ” என்று அழைக்கப்பட்டவர், தற்போது முன்னணி நடிகராகிவிட்டார். மேலும் சிம்பு, பலமுறை காதலில் விழுந்து தோல்விகளையே சந்தித்திருக்கிறார். எனவே அவரின் தந்தையான டி.ராஜேந்திரன் பல வருடங்களாக அவருக்காக பெண் பார்த்து வருகிறார்.
எனினும், அவருக்கு தற்போது வரை பெண் அமையவில்லை. இந்நிலையில், சிவகங்கை மாவட்டத்தில் வசிக்கும் லட்சுமி அம்மா என்ற பெண் சாமியார், ராஜ குடும்பத்தில் பிறந்தவராம். சிறு வயது முதலே ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்டிருந்ததால், சித்தர்கள் ஐந்து பேரிடம் தீட்சை பெற்றிருக்கிறார் என்று கூறுகிறார்கள்.
இவர் சமீபத்தில் ஒரு நேர்காணலில் கூறியதாவது, நடிகைகள் மனதிலிருக்கும் துன்பங்களை மறைத்து, வெளியில் பொய்யாக சிரித்து நடிக்கிறார்கள். ஒரு சமயத்தில் அவர்களுக்கு தங்கள் தொழில் மேல் கசப்பு உண்டாகும். அப்போது தான் திருமணம் செய்கிறார்கள். அப்போது அவர்களின் திருமண வாழ்விலும் பிரச்சனை ஏற்பட்டால் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்.
தமிழ் திரையுலகில் இருக்கும், நயன்தாரா, திரிஷா மற்றும் அனுஷ்கா ஆகியோர் தெய்வப் பெண்கள் என்றார். மேலும், அவரிடம் சிம்புவின் திருமணம் தொடர்பில் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அப்போது, சிம்புவிற்கு திருமண தோஷம் இருப்பதாக கூறினார். மேலும் அனைத்து குடும்பத்திலும் ஒரு ரகசியம் இருக்கும். அவரது குடும்பம் தொடர்பில் இருக்கும் ரகசியத்தை தன்னிடம் வந்து கேட்டு பரிகாரம் செய்தால், தோஷங்கள் நீங்கி, திருமணம் நடக்கும் என்று கூறியிருக்கிறார்.