Categories
சினிமா தமிழ் சினிமா

கார்த்தி படத்தில் பாடிய சிம்பு…. இன்று வெளியிடப்படும் என்று தகவல்…!!

கார்த்தி நடிப்பில் உருவாகிவரும் “சுல்தான்” திரைப்படத்தில் சிம்பு ஒரு பாடலை பாடியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் சிம்பு. இவர் நடிப்பு மட்டுமின்றி பாடல் பாடுவது இசையமைப்பது ஆகியவற்றிலும் தன் திறமையை காட்டி வருகிறார். இந்நிலையில் இவர் நடிகர் கார்த்தி உடன் சேர்ந்து முதல் முறையாக பணியாற்றி உள்ளார். அதன்படி கார்த்தி நடிக்கும் “சுல்தான்” திரைப்படத்தின் ஒரு பாடலை சிம்பு பாடியுள்ளார்.

சிம்பு பாடியிருக்கும் இந்தப் பாடல் இன்று மாலை வெளியிடப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. ஆகையால் கார்த்தியின் படத்தில் சிம்பு பாடியிருப்பதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

Categories

Tech |