சிலம்பரசன் வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோ காட்சியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் சிலம்பரசன். இவர் தற்போது “மாநாடு” படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஆகையால் வரும் ரம்ஜானை முன்னிட்டு “மாநாடு” திரைப்படம் வெளியிடப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சிம்பு அவர் தன் செல்லப் பிராணியுடன் கொஞ்சும் வீடியோ ஒன்றை காதலர் தினத்தன்று வெளியிட்டார். அந்த வீடியோ மிகவும் வைரலாக பரவியது. இதே போன்று அவர் மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த வீடியோவிற்கு லைக்ஸ்கள் அள்ளி வருகிறது.