வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் சிம்பு 5 வேடங்களில் நடிப்பதாக வெளியான தகவல் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் சிம்புவின் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் வேகமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சிம்பு, இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், ‘வெந்து தணிந்தது காடு’ என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இத்திரைப்படத்தில் சிம்பு, முத்து என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்றும் அது முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இத்திரைப்படத்தில் சிம்பு ஐந்து விதமான வேடங்களில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் சூர்யா கூட்டணியில் வெளியான வாரணம் ஆயிரம் திரைப்படத்தில் சூர்யா பல வேடங்களில் நடித்திருந்ததைப் போன்று சிம்பு இத்திரைப்படத்தில் நடித்திருக்கிறாராம். இத்தகவல் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.