சிம்புவின் மாநாடு திரைப்படத்தின் அடுத்தகட்ட பணிகள் பூஜையுடன் தொடங்கியுள்ளது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் திரைப்படம் ‘மாநாடு’. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் ஹீரோயினாகவும்., எஸ் ஜே சூர்யா வில்லனாகவும் நடித்துள்ளனர்.
யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முடிந்துள்ள நிலையில் தற்போது அடுத்த கட்ட பணிகள் தொடங்கியுள்ளது. அதன்படி மாநாடு திரைப்படத்தின் டப்பிங் பணியை படக்குழு பூஜையுடன் தொடங்கியுள்ளது. அப்போது படக்குழுவினர் அனைவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.