Categories
சினிமா தமிழ் சினிமா

கன்னியாகுமரியில் நடைபெறும் சிம்புவின் புதிய பட ஷூட்டிங்…. ஹீரோயின் வெளியிட்ட பதிவு….!!

சிம்பு நடிக்கும் ‘பத்து தல’ படத்தின் ஷூட்டிங் கன்னியாகுமரியில் நடைபெற்று வருகிறது.

தமிழ் சினிமாவில் சிலம்பரசன் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இவர் தற்போது கிருஷ்ணா இயக்கத்தில் ”பத்து தல” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடிக்கின்றனர். இதனையடுத்து, இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கன்னியாகுமரியில் நடந்து வருகிறது.

சிம்புவின் 'பத்து தல' படத்தின் ஃப்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார்  ஏ.ஆர்.ரகுமான் !

 

இதுகுறித்து, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரியா பவானி சங்கர் பதிவிட்டுள்ளார். அதில், ”ஒரு வாரமாக கன்னியாகுமரியில் ‘பத்துதல’ படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறோம். இந்த ஊரின் மக்கள், வானிலை, உணவு மற்றும் அமைதி ஆகியவை அடுத்த முறை வரை என் இதயத்தில் எப்போதும் இருக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/CVo1KcjhJ4v/

Categories

Tech |