சிம்புவின் புதிய படத்தின் டைட்டிலுக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் தொடர்ந்து சர்ச்சைகளை சந்தித்து வரும் நடிகர் என்றால் அவர் நம் சிம்பு தான். இவர் தற்போது கௌதம் மேனன் இயக்கம் புதிய படத்தில் நடித்து வருகிறார். கௌதம் மேனன் மற்றும் சிம்பு கூட்டணியில் ஏற்கனவே விண்ணைத் தாண்டி வருவாயா மற்றும் அச்சம் என்பது மடமையடா ஆகிய இரண்டு படங்கள் வெளியாகியுள்ளது. இதை தொடர்ந்து இவர்கள் தற்போது மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர்.
ஐசரி கணேஷ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இந்நிலையில் சிம்புவின் 47வது திரைப்படமான இப்படத்தின் டைட்டில் நேற்று வெளியானது. முன்னதாக இப்படத்திற்கு நதிகளில் நீராடும் சூரியன் என தலைப்பு வைக்கப்பட்டிருந்தது. ஆனால் இத்தலைப்பு படத்துக்கு சம்பந்தம் இல்லாதது போல் இருந்ததால் இத்தலைப்பு மாற்றப் பட்டு “வெந்து தணிந்தது காடு” என வைத்துள்ளனர்.
நேற்று வெளியான இப்படத்தின் போஸ்டரில் சிம்பு இதுவரை யாரும் பார்த்திராத தோற்றத்தில் இருக்கிறார். இந்த போஸ்டர் பார்ப்பதற்கு எதிர்பார்ப்பை அதிகரிப்பது போல தெரிந்தாலும் இப்படத்தின் தலைப்பிற்கு புதிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அதன்படி மதிசுதா என்பவர் இத்தலைப்பை பயன்படுத்தி ஏற்கனவே ஒரு படத்தை அறிவித்துள்ளார். ஆகையால் சிம்பு படத்தின் இந்த தலைப்பிற்கும் தற்போது பிரச்சனை எழுந்துள்ளது.