‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ வெளியாகியுள்ளது.
நடிகர் சிம்பு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ‘மாநாடு’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வெற்றயடைந்தது. இதனையடுத்து தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ”வெந்து தணிந்தது காடு”.
ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தில் ராதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.