நடிகர் சிம்புவின் ‘மாநாடு’ படப்பிடிப்பு புகைப்படங்களை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் ஈஸ்வரன் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . இயக்குனர் சுசீந்திரன் இயக்கியுள்ள இந்த படத்தில் பாரதிராஜா, நிதி அகர்வால், நந்திதா, பாலசரவணன், முனீஸ் காந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதையடுத்து நடிகர் சிம்பு நடிப்பில் ‘மாநாடு’ திரைப் படம் தயாராகி வருகிறது . இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் பிரியதர்ஷினி ,எஸ்.ஜே. சூர்யா , கருணாகரன் ,எஸ்.ஏ.சந்திரசேகர், டேனியல், பிரேம்ஜி ,உதயா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர் .
#Maanaadu Shoot started today @ the spot…@SilambarasanTR_ @vp_offl @thisisysr @kalyanipriyan @iam_SJSuryah @ACTOR_UDHAYAA @manojkumarb_76 @Premgiamaren @Anjenakirti @Richardmnathan @Cinemainmygenes @UmeshJKumar@johnmediamanagr pic.twitter.com/UQlw7uDvkW
— sureshkamatchi (@sureshkamatchi) January 19, 2021
இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார் . பொங்கல் தினத்தில் வெளியான ‘மாநாடு’ மோஷன் போஸ்டர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் மாநாடு படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்களை படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி டுவிட்டரில் வெளியிட்டுள்ளார் . இந்த படத்திற்கு பிறகு நடிகர் சிம்பு இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகும் ‘பத்துதல’ படத்தில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது.