நடிகர் சிம்புவின் ‘பத்துதல’ படத்தில் பிரபல எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்பு நடிப்பில் தயாராகியுள்ள ‘ஈஸ்வரன்’ படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இவர் தற்போது வெங்கட்பிரபுவின் ‘மாநாடு’ படத்தில் நடித்து வருகிறார். சிம்பு அடுத்ததாக இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல படத்தில் நடிக்க உள்ளார் . இந்த படத்தில் கௌதம் கார்த்திக் மற்றும் பிரியா பவானி சங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் .
We are in deed proud to have you on board as an actor. Welcome @poetmanush sir#PathuThala@kegvraja @NehaGnanavel @nameis_krishna @SilambarasanTR_ @Gautham_Karthik @priya_Bshankar @Iamteejaymelody @DoneChannel1 @SureshChandraa pic.twitter.com/qCVGddy3nB
— Studio Green (@StudioGreen2) January 7, 2021
இந்த படம் கன்னடத்தில் வெளியாகி வெற்றிபெற்ற முப்தி படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். நேற்று அசுரன் பட நடிகர் டீஜே அருணாச்சலம் ‘பத்துதல’ படத்தில் இணைந்துள்ளதாக படக்குழு அறிவித்தது. இந்நிலையில் இன்று பிரபல எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது . இவர் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது .