சிம்மம் ராசி அன்பர்களே…!! இன்று சிரமத்தினை பிறரிடம் சொல்ல வேண்டாம். செயல் நிறைவேற ஒருமுகத்தன்மை அவசியம். தொழிலில் சராசரி உற்பத்தி இருக்கும். சேமிப்பு பணம் செலவாகும். உடல் ஆரோக்கியத்துக்கு சிகிச்சை பெறுவது நல்லது. இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளின் கெடுபிடிகளையும் சந்திக்க வேண்டியிருக்கும்.
குடும்பத்தில் திடீர் பிரச்சனைகள் கொஞ்சம் தலை தூக்கலாம். கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம், பிள்ளைகளின் செயல்களால் மன அழுத்தம் போன்றவை ஏற்படும். உத்யோகஸ்தர்கள் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது. இன்று எந்த ஒரு விஷயத்தையும் கவனமாக தான் நீங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கும். நண்பர்கள் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. யாருக்கும் பஞ்சாயத்துக்கள் ஏதும் சொல்ல வேண்டாம்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் செய்யும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் அணைத்து காரியம் நல்லபடியாக நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம் :வெள்ளை மற்றும் இளம் பச்சை நிறம்