சிம்ம ராசி அன்பர்களே…! இன்று யோகங்கள் ஏற்பட யோசித்து செயல்பட வேண்டிய நாள் ஆக இருக்கும். எப்படியும் முடிந்துவிடும் என நினைத்த வேலை ஒன்று முடியாமல் போகலாம். குடும்ப பெரியவர்கள் உங்கள் செயல்பாடுகளில் குறை கண்டுபிடிக்கலாம். அடுத்தவர்களின் நலனுக்காக செலவு செய்ய வேண்டியிருக்கும். அரசியல் துறையை சார்ந்தவர்களுக்கு, மேலிடத்துக்கு தீடிர் இடைவெளி கொஞ்சம் ஏற்படலாம். எதிர்பாராத செலவுகள் அதிகமாகத்தான் இருக்கும்.
காரியதாமதம் ஏற்படும். கூடுமானவரை செலவை கட்டுப்படுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளுங்கள் . தேவையில்லாத பொருட்கள் மீது தயவு செய்து முதலீடுகள் மேற்கொள்ள வேண்டாம். கொடுக்கல், வாங்கல்கள் ஓரளவு சீராக இருக்கும். புதிதாக கடனை இப்போதைக்கு வாங்க வேண்டாம். புதிய முயற்சியலை தயவு செய்து தள்ளி போட்டுவிடுங்கள். காதலர்கள் இன்று கொஞ்சம் பொறுமை காக்க வேண்டும். பேசும்போது நிதானத்தைக் கடைப்பிடிக்கவேண்டும். திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு வரன்கள் இல்லம் தேடிவரும்.
இன்று உடல் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் இருக்கட்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது வெள்ளை நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று சித்தர்கள் வழிபாட்டையும்,குரு பகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள், அனைத்தும் மிக சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் நீல நிறம்