சிம்ம ராசி அன்பர்கள், இன்று மதிப்பும் மரியாதையும் உயரும் நாளாக இருக்கும். கடைதிறப்பு, கட்டிட திறப்பு விழாவிற்கான முயற்சிகள் கைகூடும். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட அச்சுறுத்தல்கள் அகலும், நண்பர்கள் நண்பகலுக்கு மேல் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப்பார்கள்.
திடிர் பண தேவை கொஞ்சம் ஏற்படலாம். எல்லா பிரச்சனைகளும் இன்று சுமுகமாக முடியும். வீண் முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. எதையும் ஆராய்ந்து முடிவுகளை எடுப்பது ரொம்ப நல்லது ,வேகத்தை குறைத்து வேகமுடன் செயல்படுவது நன்மை.
இன்று கணவன் மனைவிக்கு இடையே அன்பு இருக்கும். மாணவ கண்மணிகளுக்கு இன்று கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும்,மேற்கல்விக்கான முயற்சியிலும் வெற்றி ஏற்படும், விளையாட்டு துறையிலுள்ள மாணவர்களுக்கும் வெற்றி வாய்ப்புகள் கிடைக்கும்.
இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது காவி நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், காவி நிறம் உங்களுக்கு அதிர்ஷ்ட்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்துக் காரியமும் சிறப்பாகவே நடக்கும்
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 5 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் காவி