சிம்மம் ராசி அன்பர்களே, இன்று அன்புக்குரியவரை நீங்கள் சந்திக்கக்கூடும். அன்புக்குரியகளுக்கு நீங்கள் உங்களுடைய தேவையை செய்து கொடுப்பீர்கள். வியாபாரத்தில் கூடுதல் மூலதனத்துடன் அபிவிருத்தி பணி புரிவீர்கள். உற்பத்தி விற்பனை செழிக்கும். சுபச் செய்திகள் வந்து சேரும். மாணவர்கள் படிப்பில் நல்ல தேர்ச்சி பெறுவார்கள்.
இன்று இரகசியங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதால் பல காரியங்களில் தடைகள் சந்திக்கக்கூடும். இந்த விஷயத்தில் ரொம்ப கவனமாக தான் நீங்கள் செயல்பட வேண்டியிருக்கும். வீண் வாக்குவாதங்கள் அதன்மூலம் பிறரிடத்தில் பகை போன்றவை கூட ஏற்படலாம், பார்த்துக்கொள்ளுங்கள்.
தந்தை மூலம் உங்களுக்கு செலவு அதிகரிக்கும். வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் ஒழுங்காகத்தான் இருக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபமும் ஓரளவு வந்து சேரும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்.
நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் மஞ்சள் நிறம்