Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம ராசிக்கு…கோபம் தலை தூக்கும்… சிந்தனை மேலோங்கும்…!

சிம்ம ராசி அன்பர்களே …!   இன்று தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மனநிறைவு கிட்டும் நாளாக இந்நாள் இருக்கும். இன்று உச்சத்தில் இருப்பவர்கள் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும்.

முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் இருந்துவந்த பிரச்சினைகள் குறையும். கணவன் மனைவிக்கிடையே நீடித்து வந்த மன வருத்தம் நீங்கி சந்தோஷமான சூழல் அமையும். பிள்ளைகளின் நலனில் அக்கறை கொள்வீர்கள். வாழ்க்கை பற்றிய சிந்தனை அதிகரிக்கும். தேவையில்லாத விஷயத்திற்கு கோபம் கொஞ்சம் தலை தூக்கும். காதலர்களுக்கு இன்று இனிமையான நாளாகவே இருக்கும்.

எடுக்கும் முயற்சியில் வெற்றி இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று சனிக்கிழமை என்பதால் எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்புடன் இருக்கலாம்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு

அதிர்ஷ்ட எண்: 7 மற்றும் 8

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |