Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம ராசிக்கு…தொந்தரவு உண்டாகலாம்…பொறுமை தேவை…!

சிம்ம ராசி அன்பர்களே …!     இன்று வழக்கத்திற்கு மாறான பணி உங்களுக்கு கடுமையான தொந்தரவு கொடுக்கலாம். இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் கொஞ்சம் பொறுமையாக செயல்படுங்கள். செயல்கள் நிறைவேற கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும். எதிலும் கவனம் இருக்கட்டும். தொழில் வியாபாரத்தில் அரசின் சட்ட திட்டங்களில் தயவுசெய்து தவறாமல் பின்பற்றுங்கள். தேவையற்ற கடன் பெறுவதைத் தவிர்ப்பது நல்லது.

தேவை இல்லாத விஷயத்திற்காக கடன்கள் எதிர்பார்க்க வேண்டாம். அதிகம் விலை உள்ள பொருட்களை இரவல் கொடுக்க கூடாது. உடல் நலத்தில் அக்கறை காட்ட வேண்டும். சிலருக்கு அலர்ஜி சம்பந்தமான உபாதைகள் வரக்கூடும். வருமானத்திற்கு குறைவிருக்காது. எடுத்த காரியம் கைகூடும். தந்தையுடன் அனுசரித்துச் செல்லுங்கள். பூர்வீக சொத்துக்கள் மூலம் வர வேண்டிய லாபம் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டியிருக்கும்.

முயற்சிகளில் எதிர்பார்த்த பலன் தராமல் போகலாம், பொறுமையாக இருங்கள். உங்களுக்கான நேரம் வரும் வரை காத்திருங்கள். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு

அதிர்ஷ்ட எண்: 2 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறம்.

Categories

Tech |