Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம ராசிக்கு…சிக்கல்கள் இருக்கும்…பொறுமை தேவை…!

சிம்ம ராசி அன்பர்களே …!     இன்று நீங்கள் கேட்ட இடத்தில் தொகை கிடைப்பதற்கு காலதாமதம் ஏற்படும். தொழில் முன்னேற்றம் அடைய கடுமையான உழைப்பு இருக்கும். உத்தியோகத்தில் எதிர்பராத அளவு உங்களுக்கு சிக்கல்கள் இருக்கும். அதனால் நீங்கள் கவலைப்பட வேண்டாம். இன்று உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் பொறுமையாகவே செயல்படுங்கள். பிடிவாத குணத்தை மட்டும் தயவு செய்து மாற்றிக் கொள்ளுங்கள். தேவையில்லாத பிரச்சினைகளில் தயவுசெய்து தலையிட வேண்டாம்.

எதிர்பார்த்த நிதியுதவி கிடைப்பதில் சிக்கல்கள் இருக்கும் திட்டமிட்டுதான் நீங்கள் காரியங்கள் செய்ய வேண்டியிருக்கும். செலவு அதிகமாகவே இருக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை மட்டும் தயவு செய்து வாங்குங்கள். பணியாளர்களிடம் நிதானத்தைக் கடைப்பிடித்தால் ரொம்ப நல்லது. பெரியோர்களிடம் கொஞ்சம் கவனமாக நடந்து கொள்ளுங்கள். பெரியவர்களிடம்  அவரிடம் ஆலோசனை கேட்டு கூட நீங்கள் பணியை மேற்கொண்டால் ரொம்ப நல்லது.

அதேபோல் உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரி கூறுவது படி நடந்து கொள்வது நன்மை கொடுக்கும். காதலர்கள் இன்று கண்டிப்பாக பொறுமை காக்க வேண்டும். வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளம் சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: வடமேற்கு

அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: இளம் சிவப்பு மற்றும் நீல நிறம்.

Categories

Tech |