சிம்ம ராசி அன்பர்களே …! இன்று வீ ட்டுக்கு தேவையான வசதிகள் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். தொழில் வியாபாரம் சுமாராக இருக்கும். எதிர்பார்த்த கடன் உதவி கிடைக்கலாம். புதிய வாடிக்கையாளர்கள் தொடர்பு ஏற்படும். பழைய சிக்கல்களை தீர்ப்பதில் தாமதம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாமல் அனுசரித்துச் செல்வது நல்லது.
எதிர்பாராத வகையில் ஓர் இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். அதே போல சாமர்த்தியமாக செயல்பட்டு இன்று எதையும் செய்து முடிப்பீர்கள். துணிச்சல் அதிகரிக்கக் கூடிய சூழலும் இருக்கும். பணவரவு ஓரளவு திருப்தியை கொடுக்கும். எதிர்ப்புகள் குறையும். உங்கள் வளர்ச்சியில் இருந்த முட்டுக்கட்டைகள் நீங்கும். பயணங்கள் செல்ல நேரிடும். இன்று கடினமாக உழைக்க வேண்டிய சூழலும் வந்து செல்லும் அதன் மூலம் நல்ல பலன் கிடைக்க பெறுவீர்கள்.
இன்று காதலர்களுக்கு இனிமையான நாளாக இருக்கும். காதலில் புதியதாக வயப்படக்கூடிய சூழலும் இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிற ஆடை அணிவது ரொம்ப நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறம்.