Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம ராசிக்கு…கோபம் உண்டாகலாம்…உற்சாகம் அதிகரிக்கும்…!

சிம்ம ராசி அன்பர்களே…!     இன்று செயல்களில் உற்சாகம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி இலக்கு பூர்த்தியாகும். உபரி பணவரவும் இருக்கும். குடும்பத்தினருடன் விரும்பி உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். நண்பர்கள்  வகையில் நன்மையை எதிர்பார்க்கலாம். இன்று குடும்பத்தில் நடைபெறும் சில விஷயங்கள் உங்கள் கோபத்தை தூண்டும் எனவே வீண் வாக்குவாதங்களில் மட்டும் ஈடுபடாமல் இருப்பது நல்லது.

கவனமாக பேசுவதன் மூலம் நன்மை ஏற்படும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உறவினர்கள் மத்தியில் இருந்த பழைய கசப்புகளை மாறும். நிதி மேலாண்மை சீர்படும். மற்றவர்கள் பார்வையில் படும் படி பணத்தை மட்டும் என்ன வேண்டாம். காதலர்கள் இன்று பொறுமை காக்க வேண்டும். நிதானத்தை கண்டிப்பாக கடைப்பிடித்து ஆகவேண்டும்.

பயணங்கள் செல்வதாக இருந்தால் கவனமாக சென்று வாருங்கள் இன்று வாகனத்தில் செல்லும்போதும் கவனமாக இருக்கவேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப  நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். அதுபோலவே இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குருபகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.

அதிர்ஷ்டமான திசை: மேற்கு

அதிர்ஷ்ட எண்: 4 மற்றும் 7

அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்.

Categories

Tech |