சிம்ம ராசி அன்பர்களே…! இன்று வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும். கட்டிய வீட்டை பழுது பார்க்கும் எண்ணம் மேலோங்கும். சகோதர வழியில் எதிர்பார்த்த நல்ல பலன் கிடைக்கும். பஞ்சாயத்துக்கள் சாதகமாக இருக்கும். வியாபாரப் போட்டிகள் விலகிச்செல்லும். தடை தாமதங்கள் நீங்கும். வாழ்கையில் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் அமைதி நிலவும்.
பெண்களுக்கு எதிர்பார்த்த செல்வச் சேர்க்கையும் ஏற்படும். இன்று முன்னேற்றமான நாளாகவே இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் பரிபூரணமாக கிடைக்கும். மனக்குழப்பம் நீங்கி அனைத்து விஷயங்களும் பெற்றிருக்கும். நிதி மேலாண்மை சீர்படும். பொருளாதாரமும் நல்லபடியாகவே இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனம் கொள்ளுங்கள்.
சரியான உணவை தேர்ந்தெடுத்து உண்ணுங்கள். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் போது சிவப்பு நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. சிவப்பு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தையே கொடுக்கும். இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள் காரியங்கள் அனைத்தும் ரொம்ப நல்லபடியாக நடந்து முடியும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 3 மற்றும் 7
அதிஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் நீல நிறம்.