Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

சிம்ம ராசிக்கு…போட்டிகள் அகலும்… சலுகைகள் கிடைக்கும்…!

சிம்ம ராசி அன்பர்களே…!      இன்று குலதெய்வத்தை வழிபட்டு விட்டு காரியங்களில் தொடர்வது ரொம்ப நல்லது. அனைத்து விஷயங்களிலும் நன்மைக்கான இறை வழிபாட்டுடன் காரியங்களை மேற்கொள்ளுங்கள். வியாபாரத்தில் போட்டிகள் அகலும். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வீர்கள். அரசு வழியில் சலுகைகள் எதிர்பார்த்தபடி வந்து சேரும்.

சாமர்த்தியமான பேச்சு இக்கட்டான நேரங்களில் கை கொடுக்கும். எதிலும் கவனத்துடன் மேற்கொள்ளுங்கள். புதிய நண்பர்களின் சேர்க்கையும் அவர்களால் உதவியும் கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான பணிகள் நடக்கும். இன்று உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள். வயிற்று உப்புசம் போன்ற பிரச்சனைகள் ஏற்படக்கூடும். இன்று காதலர்களுக்கு இனிமையான நாளாக இருக்கும்.

திருமண முயற்சிகளை மேற்கொள்ளுங்கள் சிறப்பாக நடைபெறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளம் நீல நிறத்தில் ஆடை அணிவது ரொம்ப நல்லது. இளம் நீலம் உங்களுக்கு அதிஷ்டத்தையே  கொடுக்கும். அது போலவே இன்று சனிக்கிழமை என்பதால் எல் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னம்மாக கொடுங்கள் உங்கள் வாழ்க்கையில் உள்ள தோஷங்கள் நீங்கப் பெற்று செல்வச் செழிப்பு ஏற்படும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்கள்: 3 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம்: நீலம் மற்றும் மஞ்சள் நிறம்.

Categories

Tech |